குணங்குடி மஸ்தான் சாகிபு

சமய முன்னோடிகள் - குணங்குடி மஸ்தான் சாகிபு

  • மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் புலவர் எனப்பட்டவர்  குணங்குடி மஸ்தான் சாகிபு
  • இயற்பெயர் : சுல்தான் அப்துல் காதர்
  • இளம்வயதிலேயே முற்றுந்துறந்த முனிவராக வாழ்ந்தவர் குணங்குடியார்
  • குணங்குடி மஸ்தான் சாகிபு தனித்திருந்து ஞானம் பெற்ற மலைகள்: சதுரகிரி, புறாமலை, நாகமலை
  • குணங்குடி மஸ்தான் சாகிபு பாடிய கண்ணிகள்: பராபரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி
  • தாயுமானவரின் பராபரக்கண்ணியைப் போலவே ஓசை நயமிக்க இசுலாமியப் பாடல்களை எழுதியவர் குணங்குடி மஸ்தான் சாகிபு
  • என்றும் அழியாப் பேரின்ப நிலைக்கு நம்மை அழைத்துச் செல்பவை குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்
  • குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை போன்ற பொருள் தரும் பாடல்களைப் பாடியவர் குணங்குடி மஸ்தான் சாகிபு
  • குணங்குடி மஸ்தான் சாகிபு மீது நான்மணி மாலை பாடியவர் திருத்தணிச் சரவணப் பெருமாள்
  • மடல்சூழ் புவியில் உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்தவர் எனப் புகழப்பட்டவர் குணங்குடி மஸ்தான் 
  • அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சிதிரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்